மாகாண சபைத் தேர்தல் வாக்களிப்பு தொடர்பான முறைப்பாடுகளை முன்வைப்பதற்கு விசேட தொலைபேசி மற்றும் தொலைநகல் இலக்கங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
இதற்கமைய, மத்திய மாகாணத்தின் கண்டி மாவட்டத்திற்கான முறைப்பாடுகளை 0112 877 073 என்ற தொலைபேசி இலக்கத்திற்கும், மாத்தளை மாவட்டத்திற்கான முறைப்பாடுகளை 0112 877 074 என்ற தொலைபேசி இலக்கத்திற்கும் முன்வைக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நுவரெலியா மாவட்டத்தின் முறைப்பாடுகளை 0112 877 075 என்ற தொலைபேசி இலக்கத்திற்கும் அறிவிக்க முடியுமென தேர்தல்கள் செயலகம் குறிப்பிட்டுள்ளது.
இந்த மாவட்டங்களுக்கான தொலைநகல் இலக்கங்களும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
கண்டி மாவட்ட வாக்காளர்கள் 0112 877 047 என்ற இலக்கத்திற்கும் , மாத்தளை மாவட்ட வாக்களார்கள் 0112 877 050 என்ற இலக்கத்திற்கும், நுவரெலியா மாவட்ட வாக்காளர்கள் 0112 877 051 என்ற தொலைநகல் இலக்கத்திற்கும் முறைப்பாடுகளை அனுப்பமுடியும்.
வட மாகாணத்தின் யாழ். மாவட்டத்திற்கான முறைப்பாடுகளை 0112 877 076 என்ற தொலைபேசி இலக்கத்திற்கும், 0112 877 053 என்ற தொலைநகல் இலக்கத்திற்கும் அறிவிக்க முடியும்.
கிளிநொச்சி மற்றும் மன்னார் ஆகிய மாவட்டங்களுக்கான முறைப்பாடுகளை0112 877 078 என்ற தொலைபேசி இலக்கத்திற்கும், 0112 877 054 என்ற தொலைநகல் இலக்கத்திற்கும் முன்வைக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது
மன்னார் மற்றும் வவுனியா மாவட்டங்களுக்கான முறைப்பாடுகளை முன்வைப்பதற்கு 0112 877 081 என்ற தொலைபேசி இலக்கம் வழங்கப்பட்டுள்ளதுடன், அந்த மாவட்டங்களுக்காக 0112 877 056 மற்றும்0112 877 061 ஆகிய தொலைநகல் இலக்கங்களும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
வடமேல் மாகாணத்தின் குருநாகல் மற்றும் புத்தளம் மாவட்ட வாக்களார்கள் தேர்தல் தொடர்பான முறைப்பாடுகளை முன்வைப்பதற்கு 0112 877 065மற்றும் 0112 877 069 ஆகிய தொலைபேசி இலக்கங்கள் வழங்கப்பட்டுள்ளன.
இந்த மாவட்டங்களுக்கான முறைப்பாடுகளை 0112 877 041 மற்றும் 0112 877 042 என்ற தொநைகல் இலக்கங்களுக்கு அனுப்பமுடியும் என தேர்தல்கள் செயலகம் அறிவித்துள்ளது.