தேர்தலை முன்னிட்டு விசேட பாதுகாப்பு திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் குறிப்பிடுகின்றது.
மாகாண சபைத் தேர்தலுக்கான பாதுகாப்பிற்காக பொலிஸாருடன், விசேட அதிரடிப் படையினரும் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் புத்திக்க சிறிவர்த்தன தெரிவித்தார்.
வாக்கெண்ணும் நிலையங்களுக்கு வெளியிலும் பாதுகாப்பிற்காக பொலிஸ் விசேட அதிரடிப் படையினரை ஈடுபடுத்துவதற்கு திட்டமிட்டுள்ளதாக அவர் கூறினார்.
தேர்தல் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக 24 ஆயிரத்து 500 பொலிஸார் கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் சுட்டிக்காட்டினார்.
