நுவரெலியா மாவட்டத்தின் பிரபல எதிர்க்கட்சி செயற்பாட்டாளர்கள் சிலர் இன்று ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்புடன் இணைந்து கொண்டனர்.
நுவரெலியா மாநகர சபையின் ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் பிரதி மேயரும் தற்போதைய மாநகர சபை உறுப்பினருமான கே.சந்திரசேகரன் உள்ளிட்ட மாவட்டத்தின் ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்பாட்டார்களே இணைந்துள்ளனர்.
இவர்கள் இன்று முற்பகல் கண்டி ஜனாதிபதி மாளிகைக்கு சென்று ஜனாதிபதிக்கு தமது ஆதரவை தெரிவித்துள்ளனர்.
இதேவேளை குருநாகல் மாவட்டத்தின் ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்பாட்டாளர்கள் சிலர் கண்டி, ஜனாதிபதி மாளிகையில் வைத்து ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்புடன் இணைந்து கொண்டனர்.
உடுபத்தாவ பிரதேச சபையின் முன்னாள் தலைவர் மற்றும் பிங்கிரிய, யாப்பகுவ, நிகவரடிய ஆகிய பிரதேச சபையின் எதிர்க்கட்சித் தலைவர்களும் பிங்கிரிய, யாப்பகுவ, நிகவரடிய, ஹரியால ஆகிய பிரதேச சபைகளின் உறுப்பினர்கள் உள்ளிட்ட 1500 பேர் இவ்வாறு அரசாங்கத்துடன் இணைந்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இதேவேளை, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ இன்று கண்டி ஸ்ரீ தலதா மாளிகைக்குச் சென்று வழிபாடுகளில் ஈடுபட்டார்.
இதன்போது தலதா மாளிகைக்கு வருகைதந்திருந்த மக்களுடன் கலந்துரையாடிய ஜனாதிபதி அங்கு மேற்கொள்ளப்படுகின்ற புனரமைப்புப் பணிகளையும் கண்காணித்துள்ளார்.