ஜப்பான் பன்னிரண்டு ஆண்டுகளில் முதல் முறையாக வெற்றிகரமாக ஒரு ராக்கெட்டை விண்ணில் ஏவியுள்ளது.
இப்போது ஏவப்பட்டுள்ள 'எப்சிலான்' எனப்படும் அந்த ராக்கெட், நாட்டில் தற்போது இருக்கும் ராக்கெட்டுகளின் அளவில் பாதியளவிலானது என்றும், குறைந்த செலவிலும் மேம்பட்ட திறமையுடனும் விண்ணில் செலுத்த முடியும் என்றும் இந்தத் திட்டத்தில் ஈடுபட்டிருந்த விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
சர்வதேச அளவில் செயற்கைகோள்களை விண்ணில் ஏவும் தொழில்சந்தை அதிகரித்துவரும் வேளையில், ஜப்பானின் இந்த வெற்றியானது, இந்தத் தொழில்நுட்பமானது, அந்தச் சந்தையில் பெரிய அளவுக்கு ஒரு இடத்தைப் பெற ஜப்பானுக்கு உதவும் என்று கருதப்படுகிறது.
ஒருகாலத்தில் விண்ணுக்கு செயற்கைகோள்களை அனுப்பும் சந்தையானது அமெரிக்காவின் முழுமையான பிடியில் இருந்தது.
எனினும் இப்போது அது ஐரோப்பிய ஒத்துழைப்பான ஏரியான் ஸ்பேஸ் வசம் வந்துள்ளது.
ஆனாலும், இந்தியா, சீனா ஆகிய நாடுகளும் மாற்று உபாயங்களை வழங்கி வருகின்றன.
