எதிர்வரும் 21 ஆம் திகதி நடை பெறவுள்ள மத்திய,வடக்கு மற்றும் வடமேல் ஆகிய மூன்று மாகாண சபைத் தேர்தலுக்கான வாக்காளர் அட்டைகள் விநியோகம் நேற்று வெள்ளிக்கிழமையுடன் முடிவடைந்துள்ளது. இந்த வாக்காளர் அட்டைகள் உத்தியோகபூர்வமாக கடந்த மாதம் 28 ஆம் திகதி முதல் நேற்று வெள்ளிக்கிழமை வரை தபால் ஊழியர்களினால்; வீடு வீடாக சென்று விநியோகிப்பட்டு வந்தது.
இக் காலப் பகுதிக்குள் வாக்காளர் அட்டை கிடைக்காதவர்கள்; அருகிலுள்ள அஞ்சல் மற்றும் உப-அஞ்சல் அலுவலகங்களுக்குச் சென்று தமது ஆள் அடையாளத்தை காண்பித்து தமக்குரிய வாக்காளர் அட்டையினை இன்று சனிக்கிழமை முதல் பெற்றுக் கொள்ள முடியும் என தபால் திணைக்களம் அறிவித்துள்ளது.
