BREAKING NEWS

Sep 14, 2013

23 வருடங்களின் பின் யாழ்தேவி கிளிநோச்சி நோக்கி

23 வருடங்களின் பின் யாழ்தேவி ரயில் இன்று (14) கிளிநோச்சி நோக்கி தனது பயணத்தை ஆரம்பிக்கவுள்ளது. 

இன்று காலை 9.30 மணிக்கு ஓமந்தை ரயில் நிலையத்திலிருந்து ரயில் மூலம் கிளிநொச்சி ரயில் நிலையத்தைச் சென்றடையவுள்ளது. 

நாளை 15 ஆம் திகதி முதல் பயணிகளுக்கான ரயில் சேவைகள் கிளிநொச்சிவரை இடம்பெறவுள்ளன. 

வவுனியாவில் இருந்து காங்கேசன்துறை வரையுள்ள 29 ரயில் நிலையங்கள் அரச மற்றும் தனியார் நிறுவனங்களின் உதவியுடன் நிர்மாணிக்கப்பட்டு வந்தன. 

யாழ்ப்பாணம் காங்கேசன்துறை வரை தனது சேவையை வழங்கி வந்த யாழ்தேவி 1990ஆம் ஆண்டு ஜூலை மாதம் 23ஆம் திகதியின் பின்னர் வவுனியா வரை மட்டுமே பயணித்தது. 

Share this:

 
Designed By Fazisolutions
Designed By Fazi Solutions &