இந்திய கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த் மற்றும் ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி வீரர் அங்கீத் சவான் ஆகியோருக்கு ஆயுட்கால போட்டி தடை விதிக்கப்பட்டுள்ளது.
நடைபெற்று முடிந்த ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிகளில் அவர்கள் ஆட்ட நிர்ணயத்தில் ஈடுபட்டமை உறுதிசெய்யப்பட்டதை அடுத்து இந்த போட்டித் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இன்று கூடிய இந்திய கிரிக்கெட் நிர்வாக சபையின் ஒழுக்காற்று குழு இந்த தண்டனையை விதித்ததாக இந்திய கிரிக்கெட் சபை விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதனை தவிர ஐ.பீ.எல். போட்டிகளில் ஆட்டநிர்ணயத்தில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் அமீட்சிங்கிற்கு 5வருட போட்டித் தடையும் சித்தாரத் திரிவேதிக்கு ஓராண்டு போட்டித் தடையும் விதிக்கப்பட்டுள்ளது.
