BREAKING NEWS

Sep 19, 2013

உலகின் முதல் நீர்மூழ்கி கார் [PHOTOS]


நிலம், நீர் என இரண்டிலும் செல்லும் உலகின் முதல் கன்வெர்ட்டிபிள் நீர்மூழ்கி காரை சுவிட்சர்லாந்து நாட்டை சேர்ந்த ரின்ஸ்பீடு வடிவமைத்துள்ளது.

நீர், நிலம் என இரண்டிலும் ஓட்டுவதற்கு ஏற்ற அம்சங்கள் இந்த காரில் உண்டு. 1977ல் வெளிவந்த THE SPY WHO LOVED ME ஜேம்ஸ்பாண்ட் படத்தில் வரும் நிலம் மற்றும் நீரில் செல்லும் காரை பார்த்து வடிவமைத்ததாக ரின்ஸ்பீடு CEO பிராங்க் எம் ரின்டர்நெக் தெரிவித்துள்ளார். பல சுவாரஸ்யமான கூடுதல் விபரங்களை ஸ்லைடரில் காணலாம்.

ஹோவர்கிராஃப்ட் போன்ற வடிவில் கார்கள் வடிவமைக்கப்பட்டாலும், தண்ணீருக்குள்ளும் டிரைவிங் செய்ய ஏற்ற காராக இதனை குறிப்பிடுகிறது ரின்ஸ்பீடு. லோட்டஸ் எல்லீஸ் சேஸியில் இந்த கார் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இது முழுக்க முழுக்க ஓர் எலக்ட்ரிக் கார் என்பது கூடுதல் சிறப்பு. மொத்தம் மூன்று எலக்ட்ரிக் மோட்டார்கள் பொருத்தப்பட்டுள்ளன. ஒரு மோட்டார் நிலத்தில் செல்லும்போது, தண்ணீருக்குள் மூழ்கிச் செல்லும்போது இரண்டு மோட்டார்கள் புரொப்பல்லரை இயக்கவும் துணை புரிகிறது..

ரீசார்ஜ் செய்துகொள்ளும் வகையிலான லித்தியம் அயான் பேட்டரி பொருத்தப்பட்டிருக்கிறது.

10 மீட்டர்(33அடி) ஆழம் வரை தண்ணீருக்குள் மூழ்கிச் செல்லும்.

தரையில் மணிக்கு 120 கிமீ வேகம் வரையிலும், தண்ணீரில் மிதந்து செல்லும்போது மணிக்கு 6 கிமீ வேகத்திலும், தண்ணீருக்குள் மூழ்கிச் செல்லும்போது மணிக்கு 3 கிமீ வேகத்திலும் இந்த கார் செல்லும்.

இந்த காரின் இன்டிரியர் கடல் நீராலும், அதன் உப்புத் தன்மையால் பாதிக்காத வகையில் விசேஷ பாகங்களால் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்த கார் கன்வெரிட்டிபிள் என்பதால் கூரை இல்லாமலும் தண்ணீருக்குள் மூழ்கிச் செல்லும். பயணிகள் தண்ணீருக்குள் செல்லும்போது விசேஷ உடைகள் மற்றும் செயற்கை சுவாச கருவிகளுடன் இந்த காரை எப்போதும் போல் டிரைவர் இருக்கையில் அமர்ந்து ஓட்டலாம், அமர்ந்திருக்கலாம்.
















Share this:

 
Designed By Fazisolutions
Designed By Fazi Solutions &