BREAKING NEWS

Sep 19, 2013

நஸ்ரியாவை மடக்கிய ஜெய்.



கோடம்பாக்கத்தின் இன்றைய ஹாட் ஜோடி ஜெய் - நஸ்ரியாதான். இவர் அனுமதியில்லாமல் அவர் காதல் காட்சியில் கூட நடிக்க மறுக்கும் அளவுக்கு பின்னிப் பிணைந்த உறவுக்குள் போய்விட்டார்களாம் இருவரும். 

ஜெய்யின் கையில் அப்படியொன்றும் வெயிட்டாக ஒரு படமும் இல்லை. திருமணம் எனும் நிக்காஹ் படத்தில் இவருடன் இணைந்து நடிக்கிறார் நஸ்ரியா. அதற்கு முன் ராஜா ராணி படத்தில் இருவரும் சிறப்புத் தோற்றத்தில் வருகின்றனர்.

இந்த இரு படங்களிலும் நடித்த போது, ஜெய்யின் காதலில் சிக்கிக் கொண்டாராம் நஸ்ரியா. இப்போது இருவரையும் தினமும் ஏதாவது ஒரு ஹோட்டல் அல்லது பார்ட்டியில் பார்க்க முடியும். 

சினிமா நிகழ்ச்சிகளுக்கும் கூட சேர்ந்தே வருகிறார்களாம். இது அவர்கள் காதல் விவகாரம்.. எப்படியோ போகட்டும் என்று பார்த்தால், இப்போது நஸ்ரியா உருவில் தயாரிப்பாளர்களுக்கும் இயக்குநர்களுக்கும் புதிய பிரச்சினை. 

தான் ஹீரோயினாக நடிக்கும் படங்களில் நாயகனுடன் நெருக்கமான காதல் காட்சி அல்லது முத்தக் காட்சியில் நடிக்க முடியாது என்றும், அப்படியே அந்தக் காட்சி அவசிமெயன்றால் ஜெய்யிடம் பர்மிஷன் வாங்க வேண்டும் என்றும் கறாராகச் சொல்லி கதிகலங்க வைக்கிறாராம் நஸ்ரியா.

சமீபத்தில் ஒரு முன்னணி ஹீரோவின் படத்தில் முதலிரவுக் காட்சியில் நடிக்க வேண்டியிருந்ததாம். விஷயம் கேள்விப்பட்டதும் நைஸாக நழுவிவிட்டாராம் நஸ்ரியா. பின்னர் ஒருவழியாக அவரை தேடிப் பிடித்து நடிக்க அழைத்த போது, இந்தமாதிரி காட்சிகள் இனி படத்தில் இருக்காது என எழுதிக் கொடுத்தால்தான் நடிக்க வருவேன் என்றாராம். 

என்ன செய்வதென்று கைபிசைந்து நின்றதாம் யூனிட். எல்லாம் நேரம்தான்!

Share this:

 
Designed By Fazisolutions
Designed By Fazi Solutions &