வடமேல் மாகாண சபை தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளின் இறுதி நாளான நேற்று அனைத்து கட்சிகளும் அனைத்து வேட்பாளர்களும் மும்முரமாக பிரச்சார நடவடிக்கைகளில் ஈடுபட்டதை காணக்கூடியதாக இருந்தது.
அந்தவகையில் ஐக்கிய தேசியக்கட்சி சார்பாக போட்டியிடும் ரிபாலின் வெற்றியை உறுதிப்படுத்துவதற்கான பிரச்சார நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்காக நேற்று 18-09-2013 காலை ஐக்கிய தேசியக்கட்சியின் உப தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான சஜித் பிரேமதாச வருகைதந்திருந்தார்.


