
தேர்தல் சட்டங்களை மீறிய 135 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பில் 174 முறைப்பாடுகள் முன்வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.
மத்திய மாகாணத்திலேயே கூடுதலான முறைபாடுகள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பொலிஸ் தேர்தல் நடவடிக்கைப் பிரிவிற்கு மத்திய மாகாணத்தில் இருந்து 75 முறைபாடுகள் கிடைத்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் சுட்டிக்காட்டியுள்ளது.
அத்துடன் வட மாகாணத்தில் 58 முறைபாடுகளும், வடமேல் மாகாணத்தில் 41 முறைபாடுகளும் பதிவாகியுள்ளன.
மாகாண சபைத் தேர்தலுக்கான பிரசார நடவடிக்கைகள் யாவும் நேற்று நள்ளிரவுடன் நிறைவடைந்துள்ளன.
நள்ளிரவின் பின்னர் தேர்தலுடன் தொடர்புடைய பிரசார நடவடிக்கைகள் அனைத்தும் தடை செய்யப்படுவதாக தேர்தல்கள் செயலகம் சுட்டிக்காட்டியுள்ளது.