BREAKING NEWS

Sep 19, 2013

சன்ரைஸஸ் அடுத்த சுற்றுக்கு தகுதி



சம்பியன்ஸ் லீக் இருபதுக்கு-20 கிரிக்கெட் தொடரின் தகுதிகான் போட்டிகளில் வெற்றிபெற்ற சன்ரைஸஸ் ஹைதராபாத் அணி அடுத்த சுற்றுக்கு தகுதிபெற்றுள்ளது.

மொஹாலியில் நடைபெற்ற இந்தப் போட்டியில் 7 விக்கெட்டுகளால் பைஸலாபாத் வோல்வ்ஸ் அணியை தோற்கடித்த சன்ரைஸஸ் இந்த வாய்ப்பை பெற்றுள்ளது.

128 ஓட்டங்கள் என்ற வெற்றியிலக்கை நோக்கிப் பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய சன்ரைஸஸ் ஹைதராபாத் அணி 17.3 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 131 ஓட்டங்களைப் பெற்று வெற்றியிலக்கை கடந்தது.

ஷிக்கர் தவான் 59 ஓட்டங்களைப் பெற்று, அணியின் வெற்றிவாய்ப்பை இலகுவாக்கினார்.

இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய பைஸலபாத் வோல்வ்ஸ் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 127 ஓட்டங்களைப் பெற்றது.

மிஸ்பா உல் ஹக் ஆட்டமிழக்காமல் 56 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்தார்.

Share this:

 
Designed By Fazisolutions
Designed By Fazi Solutions &