சாம்பியன்ஸ் லீக் இருபதுக்கு-20 கிரிக்கெட் தொடரில் விளையாடும் வாய்ப்பினை இலங்கையின் கந்துரட்ட மரூன்ஸ் இழந்துள்ளது.
கந்துரட்ட மரூன்ஸ் அணிக்கெதிராக இன்று நடைபெற்ற தகுதிகாண் போட்டியில் 6 விக்கெட்டுகளால் வெற்றிபெற்ற நியூசிலாந்தின் ஒட்டாஹோ அணி பிரதான சுற்றுக்குத் தகுதி பெற்றுள்ளது.
மொஹாலியில் (18-09-13) நடைபெற்ற இந்தப் போட்டியில் 155 ஓட்டங்கள் என்ற வெற்றியிலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய ஒட்டாஹோ அணி 18.4 விக்கெட் இழப்பிற்கு 157 ஓட்டங்களைப் பெற்று வெற்றிபெற்றது.
ரெயான் டென் டோசெட்டே 64 ஓட்டங்களையும், ஜேம்ஸ் நிசாம் 32 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.
டில்ஹார லொக்குஹெட்டிகே மூன்று விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.
இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய கந்துரட்ட மரூன்ஸ் அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 154 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.
உப்புல் தரங்க 76 ஓட்டங்களையும், டில்ஹாரா ஹெட்டிகே 15 ஓட்டங்களையும் அதிகபட்சமாக பெற்றுக்கொண்டனர்.
இயன் பட்லர் மூன்று விக்கெட்டுக்களைக் கைப்பற்றினர்.
