
மன்னார் புனித சவேரியார் ஆண்கள் தேசிய கல்லூரியின் மூன்று மாணவர்கள் ஜோர்தான் பயணமாகின்றனர்.
19 வயதுக்குட்பட்ட இலங்கை தேசிய கால்பந்தாட்ட அணியில் பல்வேறு போட்டிகளுக்கும் மத்தியில் தேர்வு செய்யப்பட்டே இவர்கள் இந்த வாய்ப்பை தமதாக்கிகொண்டுள்ளனர்.
இந்த மாதம் 23 ம் திகதியிலிருந்து அடுத்த மாதம் 2 ம் திகதி வரை ஜோர்தானில் இடம்பெறவுள்ள ஆசிய கிண்ண போட்டித்தொடரில் 19 வயதுக்குட்பட்ட இலங்கை தேசிய அணியை பிரதிநிதித்துவம் செய்தே இவர்கள் விளையாடவுள்ளனர்.
இலங்கையின் கால்பந்தாட்ட வரலாற்றில் பல தேசிய சாதனைகளை வருடாவருடம் நிகழ்த்திவரும் இந்த கல்லூரியிலிருந்து பல வீரர்கள் தேசிய அணியில் இடம்பெற்றுவருகின்றமை பாராட்டுக்குரியது.
ஆயினும் இம்முறை ஒரே கல்லூரியிலிருந்து இவ்வாறு மூன்று வீரர்களை 19 வயதுக்குட்பட்ட தேசிய அணியில் இடம்பெறசெய்தமை மன்னார் புனித சவேரியார் ஆண்கள் தேசிய கல்லூரியின் பெருமையை மேலும் எடுத்துக்காட்டுகிறது.
1.j .ஜோன்சன்
2.எஸ்.சஜீவன்
3.எஸ்.கிஷோர்
மன்னார் மாவட்ட மைந்தர்களின் மகத்தான இந்த வரலாற்று சாதனைக்கு அன்பான வாழ்த்துக்கள்.
Sooriyan-Sports