BREAKING NEWS

Sep 18, 2013

உலகின் மிகப் பெரிய ஆடம்பர படகு [PHOTOS]


உலகின் மிகப்பெரிய ஆடம்பர படகை பிரபல லர்சென் நிறுவனம் கட்டி வருகிறது. இந்த படகின் புகைப்படங்களை சமீபத்தில் வெளியிட்டு அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது லர்சென். 

லர்சென் அஸ்ஸாம் என்ற பெயரிடப்பட்டுள்ள இந்த ஆடம்பர படகின் உரிமையாளரின் பெயர் ரகசியமாக வைக்கப்பட்டுள்ளது. 

சொகுசு பயணிகள் கப்பலுக்கு இணையான அம்சங்கள் கொண்ட இந்த ஆடம்பர படகில் ஏராளமான வசதிகள் கொண்டதாக கட்டப்பட்டுள்ளது. 

180 மீட்டர் நீளம் கொண்ட இந்த படகு மிக பிரம்மாண்டமாக இருக்கிறது.

உலகின் மிகப்பெரிய ஆடம்பர படகு என சாதனையை பெற்ற எக்லிப்ஸ் படகின் சாதனையை இந்த படகு முறியடித்துள்ளது.

இந்த படகு கட்டுமானத் திட்டத்துக்கு முபாரக் சாத் அல் அபாபி தலைமை வகித்தார். இதன் இன்டிரியர் டிசைன் பொறுப்பை லர்சென் நிறுவனத்தின் முந்தைய ஆடம்பர படகுகளான நாட்டா மற்றும் கிறிஸ்டோப் லியோனி படகுகளில் பணிபுரிந்த பொறியாளர்களே செய்துள்ளனர்.

இரண்டு டீசல் எஞ்சின் மற்றும் இரண்டு கேஸ் டர்பைன் எஞ்சின்கள் இந்த படகில் பொருத்தப்பட்டுள்ளன.

இந்த படகு அதிகபட்சமாக 30 நாட்டிக்கல் மைல்(மணிக்கு 55கிமீ) வேகத்தில் செல்லும்.

இந்த படகின் முன்புற டெக்கில் ஹெலிபேட் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த படகை கட்டமைக்க மூன்று ஆண்டுகள் ஆனதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், இன்னமும் பணிகள் முழுமையடையவில்லை.

இந்த படகின் இன்டிரியர் படங்கள், உரிமையாளர் பெயர், விலை உள்ளிட்ட விபரங்களை லர்சென் இதுவரை வெளியிடவில்லை.









Share this:

 
Designed By Fazisolutions
Designed By Fazi Solutions &