
பயணிகளின் பாதுகாப்பு கருதி கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்தில் சி.சி.டிவி பாதுகாப்பு கமராக்களை பொருத்துவதற்கு ரயில்வே திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.
இந்த பாதுகாப்பு கமராக்கள் அடுத்த மாத இறுதிப் பகுதிக்குள் பொருத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன்மூலம் ரயில் நிலையத்தில் இடம்பெறும் அனைத்து விடயங்களையும் ரயில்வே கட்டுப்பாட்டுப் பிரிவு மற்றும் ரயில்வே அத்தியட்சகருக்கு பார்வையிட முடியும்.
குறிப்பாக ரயில் நிலையங்களில் இடம்பெறும் திருட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடையவர்களை இலகுவாக கண்டுபிடிக்க முடியும் என ரயில்வே திணைக்களம் தெரிவிக்கின்றது.