மாகாண சபை தேர்தலில் தனித்து போட்டியிடும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸிற்கு ஆதரவாக பிரஜைகளின் முன்னணியின் பொதுச் செயலாளர் ஜே.ஸ்ரீரங்கா பிரசார நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார்.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் கண்டி மாவட்ட முதன்மை வேட்பாளர் உவைஸ் ஹாஜியரை ஆதரித்து பிரசார கூட்டமொன்று நேற்று சனிக்கிழமை உடுநுவர பிரதேசத்தில் இடம்பெற்றது.
இந்த கூட்டத்தில் பிரஜைகளின் முன்னணியின் பொதுச் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஜே.ஸ்ரீரங்காவும் கலந்துகொண்டு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸிற்கு ஆதரவாக பிரசாத்தில் ஈடுபட்டார்.
இந்த கூட்டத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் நீதி அமைச்சருமான ரவூப் ஹக்கீம் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம்.ஹரீஸ் உட்பட பலர் கலந்துகொண்டார்.
.jpg)