சம்பியன் லீக் இருபதுக்கு-20 கிரிக்கெட் போட்டித் தொடரின் தகுதிகாண் சுற்றுக்கான இரண்டாவது போட்டியில் சன்ரைஸஸ் ஹைதராபாத் அணி 8 விக்கெட்டுகளால் வெற்றிபெற்றுள்ளது.
மொஹாலியில் நடைபெற்ற இந்த போட்டியில் 169 ஓட்டங்கள் என்ற வெற்றியிலக்கை நோக்கி பதிலளித்தாடிய சன்ரைஸஸ் ஹைதராபாத் அணி, 18.3 ஓவர்கள் நிறைவில் 2 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து 174 ஓட்டங்களை பெற்று வெற்றியிலக்கை கடந்தது.
துடுப்பாட்டத்தில் ஷிகர் தவான் 71 ஓட்டங்களையும் பார்த்திவ் பட்டேல் 52 ஓட்டங்களையும் பெற்றனர்.
முதலில் துடுப்பெடுத்தாடிய கந்துரட்ட மெரூன்ஸ் அணி 20 ஓவர்கள் நிறைவில் 3 விக்கெட்டுகளை இழந்து 168 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது.
துடுப்பாட்டத்தில் குமார் சங்கக்கார ஆட்டமிழக்காமல் 61 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.
பந்துவீச்சில் சன்ரைஸஸ் ஹைதராபாத் அணி சார்பில் இஷாந்த் ஷர்மா 2 விக்கட்டுக்களை கைப்பற்றியதுடன் டெரன் சமி ஒரு விக்கெட்டை வீழ்த்தினார்.