BREAKING NEWS

Sep 18, 2013

ஜனாதிபதிக்கு வழங்கவுள்ள மகஜருக்கான கையெழுத்து திரட்டல்.

ஜனாதிபதிக்கு வழங்கவுள்ள மகஜருக்கான கையெழுத்து திரட்டல - முக்கிய அறிவித்தல் இலங்கை முஸ்லிம் சமூகத்திற்கு எதிராகத் தோன்றியுள்ள இனவாத சக்திகளின் செயற்பாடுகள் குறித்து மாண்புமிகு ஜனதிபதிக்கு விளக்கி, அத்தீய சக்திகளை தடுத்து நிறுத்த வழிவகை செய்வதன் மூலம் நாட்டின் ஒற்றுமையையும் இனங்களுக்கிடையிலான நல்லுறவையும் கட்டியெழுப்பி, முஸ்லிம் சமூகத்தின் கண்ணியத்துக்கும் நம்பிக்கைக்கும் உரமூட்டுமாறு அதிமேதகு ஜனாதிபதியைக் கோரும் மகஜருக்கான கையெழுத்துகள் திரட்டும் நிகழ்ச்சி அதன் இறுதிக்கட்டத்தை அடைந்துள்ளது, அல்ஹம்துலில்லாஹ்.

ஸ்ரீ லங்கா முஸ்லிம் பேரவையினால் கடந்த நோன்புப் பெருநாள் தினத்தன்று அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்ட  இந்நிகழ்வு நாட்டின் நாலாபுறத்திலும் உள்ள ஏராளமான பள்ளிவாயில்களின் நிருவாகத்தினரினதும், ஊர் ஜாமாத்தினரதும் உற்சாகமான பங்கேற்புடனும் மிகவும் வெற்றிகரமாக நடைபெற்றுள்ளது.

இவ்வாறு திரட்டப்பட்ட கையெழுத்துகள் அடங்கிய ஆவணங்களை பெரும்பாலான மஸ்ஜித் நிருவாகிகள் தபால் மூலமும், நேரடியாகவும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் பேரவைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இதுவரைக்கும் ஒரு இலட்சத்து ஐம்பதினாயிரத்திற்கும் (150,000) அதிகமான கையெழுத்துகள் பேரவைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளன.

தற்பொழுது இவை தொகுக்கப்பட்டு, ஆவணப்படுத்தப்பட்டுள்ளதுடன், இன்னும் சில் தினங்களுக்குள் மாண்புமிகு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவை  சந்தித்து உத்தியோகபூர்வமாக கையளிப்பதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்டுள்ளன.

எனினும், ஒரு சில மஸ்ஜித்களில் மேற்படி சேகரிக்கப்பட்ட கையெழுத்துகள் அடங்கிய ஆவணங்கள் இன்னும் அனுப்பிவைக்கப்படாமல் உள்ளதாக அறியக்கூடியதாக உள்ளது. அவ்வாறு உங்களது மஸ்ஜித்களில் ஒப்படைக்கப்படாத கையெழுத்து ஆவணங்கள் இருப்பின் உடன் 077-8492932072-7377123 எனும் இலக்கங்களுடன் தொடர்பு கொள்ளவும். ஸ்ரீ லங்கா முஸ்லிம் பேரவையின் செயலகக் குழு உங்களிடமிருந்து அவற்றை உடனடியாகப் பெற்றுக்கொள்வதற்குரிய ஏற்பாடுகளை செய்யும் என்பதை அப்பேரவை அறியத்தருகிறது.
(SLMA SECRETARIAT)

Share this:

 
Designed By Fazisolutions
Designed By Fazi Solutions &