
இப்போது 15வது திருமணத்திற்கு ரெடியாகியுள்ளார். 14 மனைவியரில் ஒருவர் மட்டும் மெஸ்வதியிடமிருந்து தப்பி விட்டார். மிச்சமுள்ள 13 பேருடன்தான் தற்போது குடும்பம் நடத்தி வருகிறார் மெஸ்வதி. தற்போது அவர்களின் எண்ணிக்கை 14 ஆக உயரவுள்ளது.
சுவாசிலாந்து நாட்டு மன்னர் மெஸ்வதி பரம சுகவாசி. அடிக்கடி திருமணம் செய்து கொள்வது இவரது பொழுதுபோக்குகளில் ஒன்றாகும்.
அதேபோன்ற ஒரு டான்ஸ் நிகழ்ச்சியை வைத்துத்தான் தற்போது தான் மணக்கவுள்ள 18 வயதுப் பெண்ணான சின்டிஸ்வா டிலாமினியைத் தேர்வு செய்துள்ளாராம் மெஸ்வதி.
டிலாமினி உள்ளூர் அழகிப் போட்டி ஒன்றில் கலந்து கொண்டவரா். படித்துள்ளாராம்.
மெஸ்வதி 1986ம் ஆண்டு அரியணை ஏறினார். அப்போது அவருக்கு வயது 18. இன்று வரை அவர்தான் மன்னராக இருக்கிறார். உலக அளவில் மிகவும் இளம் வயது மன்னர் இன்றைய தேதியில் இவர்தான்.
ஆப்பிரிக்காவில் மன்னர் ஆட்சி முறை அமலில் உள்ள ஒரே நாடு இந்த சுவாசிலாந்துதான்.
ஏற்கனவே மெஸ்வதியின் அரண்மனையில் 13 மனைவிமார்கள் உள்ளனர். ஒரு மனைவி தப்பி ஓடி விட்டார். மெஸ்வதியை எதிர்த்து அவர் போராட்டமும் கூட நடத்தியுள்ளார். இந்த நிலையில் 14வது ராணியாக சேருகிறார் புதிய மனைவி சின்டிஸ்வா.
மெஸ்வதியின் அரண்மனையின் மதிப்பு 100 மில்லியன் டாலர் என்று கூறப்படுகிறது.
ஆனால் சுவாசிலாந்து மிகவும் மோசமான பஞ்சம் மற்றும் பட்டினி, வறுமையால் பாதிக்கப்பட்டுள்ள ஒரு குட்டி நாடாகும். இங்குள்ள 10.2 லட்சம் மக்களும் வறுமையில்தான் உழன்று கொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.