வடக்கு, மத்திய மற்றும் வடமேல் மாகாண சபைகளுக்கான தேர்தலில், இதுவரை தபால்மூலம் வாக்களிக்காதவர்களுக்கு இன்று அதற்கான சந்தர்ப்பம் வழங்கப்படுவதாக தேர்தல்கள் செயலகம் அறிவித்துள்ளது.
இன்று காலை 8.30 இல் இருந்து நண்பகல் 12 மணிவரை மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலகங்களிலும், தேர்தல்கள் செயலகத்திலும் வாக்களிப்பதற்கான வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக தேர்தல்கள் செயலகம் குறிப்பிட்டுள்ளது.
இதேவேளை மாகாண சபைத் தேர்தலுக்கான பிரசார நடவடிக்கைகள் இன்று நள்ளிரவுடன் நிறைவடைவதாக தேர்தல்கள் செயலகம் குறிப்பிட்டுள்ளது.
இன்று நள்ளிரவுக்குப் பின்னர் தேர்தலுடன் தொடர்புடைய பிரசார நடவடிக்கைகள் தடை செய்யப்படுவதாக பிரதித் தேர்தல்கள் ஆணையாளர் எம்.எம் மொஹமட் தெரிவித்துள்ளார்.
