BREAKING NEWS

Sep 15, 2013

சன் ரைசர்ஸின் தலைவராக தவான்



சம்பியன்ஸ் லீக் இருபதுக்கு - 20 தகுதிச் சுற்றில் களமிறங்கும் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் தலைவராக அதிரடி வீரர் ஷிகர் தவான் நியமிக்கப்பட்டுள்ளார்.

ஐந்தாவது சம்பியன்ஸ் லீக் இருபதுக்கு-20 கிரிக்கெட் தொடர் இந்தியாவில் எதிர்வரும் 21ஆம் திகதி ஆரம்பமாகின்றது.
இதில் இந்தியாவில் இருந்து மும்பை, சென்னை, ராஜஸ்தான் ஆகிய மூன்று அணிகள் பங்கேற்கவுள்ளன.

இதுதவிர, அவுஸ்திரேலியாவின் பேர்த் ஸ்கார்ச்சர்ஸ், பிரிஸ்பேன் ஹீட், மேற்கிந்திய தீவுகளின் டிரினிடாட் அனட் டுபாகோ உள்ளிட்ட 8 அணிகள் நேரடியாக பங்கேற்கும்.

எதிர்வரும் 17ஆம் திகதி முதல் 20ம் திகதி வரை நடக்கவுள்ள தகுதிச் சுற்றின் மூலம் மீதமுள்ள 2 அணிகள் தெரிவு செய்யப்படும்.

இதில் ஐதராபாத் (இந்தியா), ஒடாகோ வோல்ட்ஸ்(நியூசிலாந்து), கந்துரட்ட மரூன்ஸ் (இலங்கை) மற்றும் பாகிஸ்தானின் பைசலாபாத் வோல்வ்ஸ் அணிகள் மோதுகின்றன.

இந்நிலையில் ஐதராபாத் சன்ரைசர்ஸ் அணியின் தலைவராக ஷிகர் தவான் நியமிக்கப்பட்டுள்ளார்.

இலங்கை உள்ளூர் இருபதுக்கு - 20 சம்பியன் கந்துரட்ட மரூன்ஸ் அணிக்காக குமார் சங்கக்கரா களமிறங்க உள்ளதால், இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Share this:

 
Designed By Fazisolutions
Designed By Fazi Solutions &