
கிரான்பாஸ் பொலிஸ் பிரிவின் விக்டோரியா பாலத்திற்கு அருகில் ஹெரோயின் வைத்திருந்த பெண்ணொருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
பேலியகொட பகுதியைச் சேர்ந்த 40 வயதான பெண்ணொருவரே இவ்வாறு கைதாகியுள்ளதாக தெரியவந்துள்ளது.
குறித்த பெண் வசமிருந்து 15 கிராம் 330 மில்லிகிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளது.
மேல்மாகாண குற்றத் தடுப்பு பிரிவினருக்கு கிடைத்த தகவலொன்றின் அடிப்படையில் நேற்றையதினம் இவர் கைதாகியுள்ளார்.
சந்தேகநபரை இன்று மாலிகாகந்த நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.