BREAKING NEWS

Sep 25, 2013

நீதிமன்றம் உத்தரவிட்டால் மீண்டும் தேர்தல்

நீதிமன்றம் உத்தரவிட்டால் மீண்டும் தேர்தல் நடத்தலாம் - மஹிந்த தேசப்பிரிய

புத்தளம் சென். அன்ருஸ் கல்லூரியில் தேர்தல் கடமையில் ஈடுபட்ட அரச ஊழியர்கள் குறித்து விசாரணை நடத்துமாறு அரச நிர்வாக மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சின் செயலாளருக்கு பணித்துள்ளதாக தேர்தல்கள் ஆணையாளர் தெரிவித்துள்ளார். 

புத்தளத்தில் வாக்குச் சீட்டுக்கள் மீட்கப்பட்டமை தொடர்பில் தெளிவுபடுத்தும் ஊடகவியலாளர் சந்திப்பு தற்சமயம் தேர்தல்கள் செயலகத்தில் இடம்பெற்று வருகிறது. 

இங்கு உரையாற்றும் தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய மேற்கண்டவாறு தெரிவித்தார். 

இதேவேளை, மோசடி இடம்பெற்றுள்ளதாக தெரிவித்து மீண்டும் தேர்தல் நடத்தும்படி நீதிமன்றம் உத்தரவிட்டால் மாத்திரமே புத்தளத்திற்கு தேர்தல் நடத்தப்படும் என தேர்தல்கள் ஆணையாளர் குறிப்பிட்டார். 

Share this:

 
Designed By Fazisolutions
Designed By Fazi Solutions &