BREAKING NEWS

Sep 17, 2013

ஒரு சவூதி தந்தையின் முன்னோடியான விசித்திர மன்னிப்பு


ஒரு சவூதி தந்தை தனது மகனை கொலைசெய்த கொலையாளியை கொலையாளி அல் குர்ஆனை முழுமையாக மனனம் செய்தால் கொலையாளியை மன்னிப்பதாக அறிவித்துள்ளார். இது தொடர்பாக ‘அல் யவ்ம் சவூதி’ என்ற பத்திரிக்கை தெரிவித்துள்ள தகவலில் , ரபி அல் – துசரி என்ற தந்தை அவரின் அப்துல்லாஹ் என்ற இளம் மகனை பைசல் அல் அமீரி என்பவர் ஒரு தகராறின் போது கொலைசெய்தமைக்காக சவூதி நீதிமன்றத்தால் மரண தண்டனை விதிக்கப்பட்டு மரண தண்டனையும் உறுதியாகி மரண தண்டனையை எதிர்நோக்கியவராக இருக்கிறார்

இந்த நிலையில் கொலையாளியை பெரும் தொகை பணத்தை பெற்றுகொண்டு மன்னிக்குமாறு கொலையாளியின் உறவினர்களும் அரச அதிகாரிகளும் கொலைசெய்யப்பட்டவரின் தந்தையை வேண்டியுள்ளனர் . பணத்தையோ பொருளையோ பெற்றுகொள்வதற்கு மறுப்பு தெரிவித்துள்ள அந்த கொலைசெய்யப்பட்டவரின் தந்தை. கொலையாளி அல் அல்குர்ஆனை முழுமையாக மனனம் செய்தால் அவரை மன்னிப்பதாக அறிவித்துள்ளார்.

அண்மையில் மகனை கொன்ற கொலையாளியை சிறைச்சாலை சென்று நேரில் சந்தித்த அந்த தந்தை கொலையாளியிடம் தனது மன்னிப்பையும் அதற்கான நிபந்தனையையும் தெரிவித்துள்ளார். இதன் போது கொலையாளியான பைசல் அல் அமீரி அதிர்ச்சியான மகிழ்ச்சி அடைந்துள்ளார். கொலையாளி தான் கொலை செய்யதவரின் தந்தையான ரபி அல் – துசரியை கட்டித் தழுவுவதை படத்தில் காணலாம்.

ஷரியா குற்றவியல் சட்டம் நடைமுறையில் இருக்கும் சவூதியில் கொலை குற்றம் புரிந்த ஒருவரை அவரின் முதல் இரத்த உறவினர் நஷ்ட ஈட்டை பெற்றுகொண்டு மன்னிக்க முடியும் என்பதும், அதேவேளை ஒரு கொலையாளியை மன்னிக்கும் அதிகாரத்தை நாட்டின் மன்னர் கூட பெற்றிருக்க வில்லை என்பது குறிப்பிடத்தக்கது .

Share this:

 
Designed By Fazisolutions
Designed By Fazi Solutions &