எந்த பொருட்களிலும் இனிமேல் ஹலால் இலட்சினை பொறிக்கப்பட மாட்டாது. ஆனால் நடைமுறையில் இருக்கும் என்பதோடு ஹலால் சான்றிதழ் பெற்ற பொருட்களை நுகர்வது அவர் அவரின் தனிப்பட்ட விருப்பம் எனினும் ஹலால் சான்றிதழ் தொடர்ந்தும் வழங்கப்படும் எனினும் இலவசமாக வழங்கப்படும் என்றும் ஹலால் சான்றிதழ் வழங்கப்பட்டுள்ள பொருட்கள் பற்றிய விபரங்கள் முஸ்லிம்களுக்கு அறியத்தரப்படும் என்றும் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா, வர்த்தக சம்மேளனம் மற்றும் பௌத்த தேரர்கள் ஏற்பாடு செய்திருந்த ஊடகவியலாளர் மாநாட்டில் சற்றுமுன் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும் வெளிநாட்டு சந்தைக்காக ஏற்றுமதி செய்யப்படும் உற்பத்திகளுக்கு மட்டும் வழமைபோல் உற்பத்தி நிறுவனங்கள் ஹலால் சான்றிதழை பெற்றுகொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை ஜமியத்துல் உலமா கட்டணமின்றி இச்சான்றிதழை வழங்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
Mar 11, 2013
HALAAL BADGE பொறிக்கப்பட மாட்டாது. ஆனால் நடைமுறையில் இருக்கும்
Posted by AliffAlerts on 10:36 in NL | Comments : 0
