BREAKING NEWS

Jun 16, 2014

புதன் கிழமை ஐக்கிய இராச்சிய பிரதமர் இல்லம் முன்பாக ஆர்ப்பாட்டம்

இனவாத தாக்குதல் கட்டவிழ்த்து விடப்பட்டு உயிர் சேதமும் ஏற்பட்டுள்ள நிலையில் ஐக்கிய இராச்சியத்தில் வாழும் இலங்கை முஸ்லிம் சமூகம் ஒருமித்த குரலில் நியாயம் கேட்க இணக்கம் கண்டுள்ளது.
பல்வேறு அமைப்புகள், ஐக்கிய இராச்சியத்தின் வெவ்வேறு இடங்களில் கூடியிருந்த போதும் பெரும்பாலும் அனைவரது எண்ணங்களும் ஒரு நிலைக்கு வந்ததன் பயனாக கடந்த மே மாத ஆர்ப்பாட்டத்தை ஒழுங்கு செய்திருந்த அதே SLMDI அமைப்பிடம் பொறுப்பளித்து இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் புதன் கிழமை (நாளை மறுநாள்) ஐக்கிய இராச்சிய பிரதமர் இல்லம் முன்பாக பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்றினை நடாத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
காலத்தின் தேவை உணர்ந்து ஐக்கிய இராச்சியத்தில் இயங்கும் அனைத்து ஊர், கொள்கைசார், சமூக சேவைகள் மற்றும் நலன்புரி அமைப்புகள் உட்பட, பள்ளிவாசல்கள், கலாச்சார நிலையங்கள் என அனைத்து தரப்பிலும் இதற்கான இணக்கம் காணப்பட்டுள்ளது.
இன்ஷா அல்லாஹ் பயங்கரவாத பொது பல சேனா அமைப்புக்கெதிராகவும் அவர்கள் அரங்கேற்றி வரும் இனவாதத்திற்கு எதிராகவும் ஐக்கிய இராச்சியத்தில் வாழும் அனைத்து முஸ்லிம்களும் புதன் கிழமை மதியம் இரண்டு மணிக்கு பிரதமர் இல்லம் முன்பாக கூடி ஒற்றுமையாக உங்கள் குரலை ஓங்கி ஒலிக்கச் செய்வது காலத்தின் கட்டாயமாகும் !
மேலதிக தொடர்புகளுக்கு : 07950261775 , 07446914555

Share this:

 
Designed By Fazisolutions
Designed By Fazi Solutions &