பாடசாலை முடிந்து வீடு திரும்பிக்கொண்டிருந்த ஆசிரியை ஒருவர் மீது அவர் கற்பிக்கும் பாடசாலையைச் சேர்ந்த மாணவர்கள் சிலர் முட்டை வீசி தாக்குதல் நடத்திய சம்பவமொன்று மொரட்டுவை பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.
முச்சக்கரவண்டியில் பயணித்துக்கொண்டிருந்த மேற்படி ஆசிரியையை வழிமறித்தே இம்மாணவர்கள் முட்டைகளை வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர். இச்சம்பவத்தில், குறித்த பாடசாலையின் மாணவ தலைவர்கள் சிலரும் இருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவம் தொடர்பில் பொலிஸில் முறைப்பாடு செய்யச் சென்ற ஆசிரியையை சமாதானப்படுத்தியுள்ள குறித்த பாடசாலையின் பழைய மாணவர் சங்க உறுப்பினர்கள், தாக்குதல் நடத்திய மாணவர்களை மன்னிப்பு கேட்க வைப்பதாக உறுதியளித்துள்ளனர்.