சிங்களவர்களின் பலம் இன்னும் 50 வருடங்களே இலங்கையில் இருக்கும் என்பதை சிங்கள மக்கள் அறிந்து கொள்ள வேண்டும் எனவும் அதன் பின்னர் அந்நிய இனங்களின் அதிகாரத்தின் கீழ் சிங்களவர்கள் வாழ நேரிடும் எனவும் அஸ்கிரிய மாநாயக்கர் உடுகம ஸ்ரீபுத்தரக்கித்த தேரர் தெரிவித்துள்ளார்.
.
இன்னும் 50 வருடங்களில் சிங்கள மக்களுக்குரிய கலாசாரம் முற்றாக இல்லாமல் போய்விடும் எனவும் அவர் கூறியுள்ளார். கண்டி உடத்தும்பர பிரதேசத்தில் நடைபெற்ற வைபவம் ஒன்றில் மாநாயக்க தேரர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
.
தூரநோக்கின்றி,தற்காலிக லாபங்களை பெறுவம் நோக்கத்தில், சிங்கள மக்கள் செயற்பட்டு வருவதன் காரணமாக இலங்கையான சர்வதேச சக்திகளிடம் சிக்கும் நாள் வெகு தொலைவில் இல்லை. சிங்கள மக்களின் செயற்பாடுகள் காரணமாக இலங்கையின் மொத்த நிலப்பரப்பில் மூன்றில் ஒரு பங்கு நிலப்பரப்பு இல்லாமல் போயுள்ளது.
.
இப்படியே சென்றால் இன்னும் 30, 40 வருடங்களில் முழு இலங்கையும் மற்றவர்களின் கைகளுக்குள் சென்று விடும் என்பது நிச்சயம். சிங்கள மக்கள் தமது பரம்பரை காணிகளை சிறிய தொகைக்கு அந்நிய இனங்களுக்கு விற்பனை செய்வதே இதற்கு காரணமாகும். இலங்கையில் சிங்கள மக்களை இல்லாதொழித்து, அவர்கள் அதிகாரத்தை கைப்பற்றவே அந்திய இனங்களை தருணம் பார்த்துள்ளனர். இதனை உணராத சிங்கள மக்கள் தமது பாரம்பரிய நிலங்களை பணத்திற்காக அந்நிய இனங்களிடம் விற்பனை செய்கின்றனர். தேசிய உணர்வுள்ள மக்கள் இது குறித்து எமக்கு அறிய தருகின்றனர். இதற்கு எதிராக குரல் கொடுத்தாலும் அந்நியர்களுக்கு காணிகளை விற்பனை செய்ய வேண்டாம் என கூறினாலும், எமக்கு தெரியாமல் அதனை செய்கின்றனர். இது மிகவும் கவலையளிக்கும் விடயமாகும் எனவும் மாநாயக்க தேரர் தெரிவித்துள்ளார்