பார்சிலோனா அணிக்கும் பரிஸ் செய்ன்ற் ஜேர்மைன் அணிக்குமிடையில் இடம்பெற்ற போட்டி சமநிலையில் முடிவடைந்தது.
பார்சிலோனா அணிக்கும் பரிஸ் செய்ன்ற் ஜேர்மைன் அணிக்குமிடையில் இடம்பெற்ற போட்டி 1 - 1 என்ற கோல் கணக்கில் சமநிலையில் முடிவடைந்திருந்தது.
முதற்பாதியில் இரு அணிகளும் கோல்கள் எதனையும் பெற்றிருக்காத நிலையில், போட்டியின் 50ஆவது நிமிடத்தில் பரிஸ் செய்ன்ற் ஜேர்மைன் அணியின் பஸ்டோர் கோலொன்றைப் பெற்றுக் கொடுக்க, அவ்வணி முன்னிலையைப் பெற்றுக்கொண்டது.
எனினும் 71ஆவது நிமிடத்தில் பார்சிலோனா அணியின் ரொட்ரிக்கஸ் கோலொன்றைப் பெற்று கோல் எண்ணிக்கையைச் சமப்படுத்தினார்.
அதன் பின்னர் இரு அணிகளும் கோல்கள் எதனையும் பெற்றுக் கொள்ளாத நிலையில், போட்டி 1 - 1 என்ற கோல் கணக்கில் சமநிலையில் முடிவடைந்தது.
பயேர்ண் முனிச் அணிக்கும் ஜூவன்டஸ் அணிக்குமிடையில் இடம்பெற்ற போட்டியில் பயேர்ண் முனிச் அணி 2 - 0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றுக் கொண்டது.
முதற்பாதியில் இரு அணிகளும் கோல்கள் எதனையும் பெற்றுக் கொள்ளாது காணப்பட, 64ஆவது நிமிடத்தில் பயேர்ண் முனிச் சார்பாக முதலாவது கோல் பெற்றுக் கொள்ளப்பட்டதோடு, போட்டியின் இறுதி நிமிடத்தில் மற்றுமொரு கோல் பெறப்பட, பயேர்ண் முனிச் அணி 2 - 0 என்ற கோல் கணக்கில் இலகுவாக வெற்றி பெற்றுக்கொண்டது.