2 முஸ்லிம் வேட்பாளர்களை UNP களமிறக்கும் என எதிர்பார்த்த குருநாகல் மாவட்ட முஸ்லிம்களுக்கு ஏமாற்றம்.
குருநாகல் மாவட்டத்தில் சுமார் 120,000 முஸ்லிம் வாக்காளர்கள் இருக்கின்ற நிலையில் இதுவரை காலமும் ஒரேயொரு தடவை முஸ்லிம் பிரதிநிதியை பாராளுமன்றுக்கு தெரிவுசெய்ய முடிந்ததே தவிர (அளவி) இதுவரை எந்தவொரு முஸ்லிம் பிரதிநிதியையும் வெட்கம்கெட்ட குருநாகல் மாவட்ட முஸ்லிம்களால் தெரிவுசெய்து அனுப்பமுடியவில்லை.
இம்முறை எவ்வாறாவது முஸ்லிம் பிரதிநிதித்துவத்தை உறுதி செய்ய வேண்டும் என்ற அவாவிலிருந்த குருநாகல் மாவட்ட முஸ்லிம்களுக்கு ஒருசில தினங்களுக்கு முன் நற்செய்தி கிட்டியது அதாவது, இம்முறை பொதுத்தேர்தலில் UNP இலிருந்து இரண்டு வேட்பாளர்கள் சட்டத்தரணி ரிஸ்வி ஜவஹர்சா மற்றும் டாக்டர் சாபி ஆகியோர் களமிரக்கப்படுவதாக தகவல்கள் வந்த நிலையில், நிச்சியமாக இம்முறை சகல முஸ்லிம்களும் கட்சிபேதமின்றி ஒன்றிணைந்து இருவரையும் பாராளுமன்றுக்கு தெரிவுசெய்து அனுப்பவேண்டும் என்ற உறுதிப்பாட்டோடு இருந்த நிலையில், இறுதி நேரத்தில் ரிஸ்வி ஜவஹர்ஷாவின் பெயர் நீக்கப்பட்டு டாக்டர் சாபியின் பெயர் சேர்க்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
எனினும் இம்முறை எவ்வாறாவது குருநாகல் மாவட்டத்திலிருந்து முஸ்லிம் பிரதிநிதித்துவம் உருதிசெய்யப்படுவது தலையாய கடமையாகும் .
