BREAKING NEWS

May 12, 2015

வில்பத்து: "அங்கு எதுவித சட்டவிரோத குடியேற்றவும் கிடையாது" - அமைச்சர் சம்பிக ரணவக்க

   PIC-1.jpgவில்பத்து சரணாலயத்தில் எதுவித சட்டவிரோத குடியிருப்பும் அமைக் கப்படவில்லை. சரணாலய எல்லைக்கு வெளியிலே வீடுகள் கட்டப்பட்டிருப்பதாக அமைச்சர் சம்பிக ரணவக்க தெரிவித்தார்.

வனவள பாதுகாப்பு பணிப்பாளரின் அனுமதியின்றி இங்கு எந்த நிர்மாண பணியும் மேற்கொள்ள முடியாது என்று குறிப்பிட்ட அவர் முன்னாள் சுற்றாடல் அமைச்சர் என்ற வகையில் வில்பத்து சரணாலயத்தை தானே திறந்து வைத்ததாகவும் அங்கு சட்டவிரோத நிர்மாணிப்புகள் இடம்பெற்றுள்ளதாக தெரிவிப்பதை ஏற்க முடியாது என்றும் தெரிவித்தார்.

மின்சக்தி எரிசக்தி அமைச்சில் நேற்று நடைபெற்ற ஊடக மாநாட்டில் எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளித்த அவர்,வில்பத்து சரணாலயத்தில் இருந்து ஒரு மைல் வரையான பிரதேசம் பாதுகாக்கப்பட்ட பகுதியாகும். இப்பகுதியில் எதுவித அபிவிருத்தி பணிகளோ மீள்குடியேற்றமோ மேற்கொள்ள முடியாது, வில்பத்து சரணாலயத்தில் மீள் குடியேற்றங்கள் இடம்பெறவில்லை.

யுத்தத்தின் பின்னர் நானே வில்பத்து சரணாலயத்தை திறந்து வைத்தேன். அதனை வர்த்தமானியில் வெளியிட்டதும் நானே. அங்குள்ள சகல இடங்களுக்கும் சென்று வந்தவன் என்ற வகையில் அங்கு எதுவித சட்டவிரோத குடியேற்றவும் கிடையாது என உறுதியாக கூறுகிறேன்.

பாதுகாக்கப்பட்ட பகுதியிலே இங்கு நிர்மாணங்கள் இடம்பெற்றுள்ளன. வனவள பாதுகாப்பு பணிப்பாளரின் அனுமதியுடன் சில பாதுகாப்பு பகுதிகளில் நிர்மாணங்கள் மேற்கொள்ள அனுமதி வழங்கப்படும். அம்பாறை, பொரலஸ்கமுவ, ஹம்பாந்தோட்டை போன்ற நகரங்களும் இவ்வாறாக பாதுகாக்கப்பட்ட பகுதிகளிலேயே அமைந்துள்ளன.

அரசியல் வாதிகளுக்கோ அரச அதிபருக்கோ தேவையானவாறு நிர் மாணங்கள் மேற்கொள்ள முடியாது.

Share this:

 
Designed By Fazisolutions
Designed By Fazi Solutions &