நேற்று குரகல எனுமிடத்திலுள்ள புனித பூமி ஒன்றுக்குள் பொலிஸ் ஆணையை மீறி நுழைய முற்பட்ட சிங்கள ராவய அமைப்பினர் மீது நீர்த்தாரைப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டது அறிந்ததே..
இந்த சம்பவத்தின் போது எடுக்கபட்ட படங்களும் சிங்கள ராவய அமைப்பினருக்கும் போலீசாருக்கும் இடையில் ஏற்பட்ட வாக்குவாதங்கள் வீடியோவும் உங்கள் பார்வைக்கு…
குறித்த இடத்திற்குள் பிரவேசிக்க வேண்டாம் என நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து இருந்து, கல்தோட்டை பொலிஸார் அது தொடர்பில் குறித்த குழுவினருக்கு அறிவித்து இருந்தும் பொலிஸாரின் அறிவுறுத்தலை மீறி சிங்கள ராவய அமைப்பின் குழுவினர் புனித பூமிக்குள் நுழைய முற்பட்ட வேளை, நீர்த்தாரைப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டது குறிப்பிடத்தக்கது.





