BREAKING NEWS

Mar 5, 2015

மன்னார் மாவட்ட கல்வி முன்னேற்ற, கற்கை சார் செயற்பாடுகளுக்கு முன்னுரிமை - றிப்கான் பதியுதீன்



மன்னார் மாவட்டத்தின் கல்வி  முன்னேற்ற மற்றும் கற்கை சார் செயற்பாடுகளுக்கு முன்னுரிமையளித்து செயற்படுவதாக வடமாகாண சபை உறுப்பினர் றிப்கான் பதியுதீன் தெரிவித்துள்ளார்.

முசலி கூளாங்குளம் பாடசாலையின் விளையாட்டு போட்டியில் அதிதியாக  கலந்து கொண்டு உரையாற்றும் போது அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இன்று இந்த பாடசாலையின் விளையாட்டுப் போட்டியில் கலந்து  கொண்டு மாணவர்களை ஊக்கப்படுத்த கிடைத்தமைக்கு பாடசாலை நிர்வாகத்திற்கு நன்றி தெரிவித்த மாகாண சபை உறுப்பினர் றிப்கான் பதியுதீன் பாடசாலைக்கான கட்டிடம் தொடர்பில் அமைச்சரும்,அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய தலைவருமான றிசாத் பதியுதீன் அவர்களுடன் கலந்துரையாவுள்ளதாகவும் கூறினார்.

இந்த நிகழ்வில் முசலி பிரதேச சபை தலைவர் யஹ்யான்,மன்னார் வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.எம்.சியான் உட்பட பலரம் கலந்து கொண்டனர்.

மாகாண சபை உறுப்பினர் றிப்கான் பதியுதீன் தமது மாகாண பாதீட்டு நிதியிலிருந்து கொள்வனவு செய்யப்பட்ட ஜெனரேட்டர் மற்றும் உபகரணங்களை பாடசாலை அதிபரிடத்தில் கையளித்தார்.





Share this:

 
Designed By Fazisolutions
Designed By Fazi Solutions &