BREAKING NEWS

Mar 5, 2015

பலமிழந்த ஏற்றுமதி மற்றும் சந்தை வாய்ப்புக்களுக்கு 100My3Daysல் முன்னுரிமை



புறக்கணிப்பு மற்றும் தரம் குன்றிய சர்வதேச உறவுகள் மூலம் பலமிழந்த ஏற்றுமதி துறைகள் மற்றும் சந்தை வாய்ப்புக்களின் மீட்புக்கு புதிய அரசாங்கத்தின் 100 நாட்கள் வேலைத்  திட்டத்தின் ஊடாக முன்னுரிமை வழங்கப்படவுள்ளதுடன் ஐரோப்பிய ஒன்றியத்தின்  ஜி.எஸ்.பி. பிளஸினை மீண்டும் பெற்றுக்கொள்வதற்கும்   ஐரோப்பிய ஒன்றியத்திற்கான மீன் உற்பத்தி மற்றும் மீன்பிடித்துறைகளுக்கான சந்தை   அணுகலை மீட்ப்பதற்கும்   ஏற்கனவே உள்ள இருக்கின்ற சந்தை அணுகல் ஆராய்தல் உட்பட சர்வதேச வர்த்தகம் மற்றும் ஏற்றுமதி ஊக்குவிப்பு தொடர்பான சுதந்திர வர்த்தக உடன்படிக்கையின் முக்கியமான பணிகளினையும் 100 நாட்கள் வேலைத் திட்டத்தில் முன்னெடுத்து செல்வதற்காக எனது அமைச்சு செயற்படும்; 
என கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் வெளிப்படுத்தினார்.  

'வர்த்தக கொள்கை மற்றும் ஏற்றுமதி அபிவிருத்தி  ஊக்குவிப்பு- 100 நாட்களுக்கு அப்பால்'
என்ற கருப்பொருளில் ஏற்றுமதி அபிவிருத்தி சபையில் இடம்பெற்ற வர்த்தக செயலமர்வொன்றிலேயே கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் இதனை வெளிப்படுத்தினார்.

செயலமர்வில் கொள்கை திட்டமிடல் மற்றும் பொருளாதார பிரதியமைச்சர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா பிரதம அதிதியாக கலந்துக்கொண்டார்.

சர்வதேச மற்றும் உள்ளூர் வர்த்தக நடவடிக்கை தொடர்பில் புதிய அரசாங்கத்தின் முதலாவது உத்தியோகபூர்வ மற்றும் பொது அறிவிப்பை அறியும் முகமாகவும்  அனைத்து மட்டங்களிலும் இருந்து சுமார் 250 க்கும் மேற்பட்ட ஏற்றுமதியாளர்கள் மற்றும் உத்தியோக பூர்வ அதிகாரிகள்  உட்பட பலர் ஏற்றுமதி அபிவிருத்தி சபையின் அரங்கத்தில் நிரம்பிவலிந்தனர்

இலங்கையின் ஏற்றுமதி மொத்த உள்நாட்டு உற்பத்தியில்; குறைந்த 15% சதவீத பங்கு அல்ல அது  20% சதவீதமாகும் என உலகளாவிய வர்த்தக பெருந்திட்டம் முதல் முறையாக வெளியிட்டமையும் குறிப்பிடத்தக்கது.

வெளி விவகார அமைச்சும்; வர்த்தக அமைச்சும்  தனித்தனியாக  தமது அமைச்சுக்குரிய செயற்பாடுகளினை முன்னெடுத்து செல்லாமல் கூட்டாக இணைந்து செயற்படவேண்டும்; இவ்வாறு செய்வதனால் சர்வதேச அளவில் பாரிய இலக்குகளை எம்மால் அடைய முடியும் என செயலமர்வில் பிரதியமைச்சர் கலாநிதி ஹர்ஷ சுட்டிக்காட்டினார்.


Share this:

 
Designed By Fazisolutions
Designed By Fazi Solutions &