
சில காலங்களாக யுடியுபில் காணக்கிடைத்த மக்கொன பேக்கரி நிறுவனமொன்றின் காவலாளி ஒருவர் யுடியுப் வீடியோ போட்டியொன்றில் உலகிலேயே சந்தோசமான நபராக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
வெலிபன்ன விதானகே சுகதபால என அறியப்படும் 60 வயது காவலாளியான இவர் தனது செயற்பாடுகள் மூலம் அனைவரையும் கவர்ந்துள்ளதுடன் தான் துன்பங்களைக் கண்டு ஒருபோதும் துவண்டுவிடுவதிலலையெனவும் தெரிவித்துள்ளதோடு தமது வாடிக்கையாளர்களை சந்தோசப்படுத்துவதன் மூலம் தானும் சந்தோசமடைவதாகவும் தனது செயற்பாடுகள் ஒருவகையில் உடற்பயிற்சியாகவும் அமைவதாக தெரிவித்துள்ளார்.
தனது பிரபலம் குறித்துத் தான் மகிழ்ச்சியடைவதாகவும் குறிப்பிடும் சுகதபால தொடர்ந்தும் அதே இடத்திலேயே பணி புரிவதோடு அவரைப் பார்ப்பதற்காகவும் சுற்றுலாப் பயணிகள் அங்கு வருகை தருவது அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றமையும் பல வெளிநாட்டு சஞ்சிகைகள், செய்தித் தளங்கள் இவரைப் பற்றி தகவல் வெளியிட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.