BREAKING NEWS

Mar 15, 2015

குருநாகல் உட்பட11 மாவட்ட செயலாளர்களுக்கு இடமாற்றம்

உடனடியாக அமுலுக்கு வரும் வகையில். 11 மாவட்ட செயலாளர்களுக்கு இடமாற்றம் வழங்க உள்விவகார அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.

இதற்கமைய, நுவரெலியா, கண்டி, மாத்தளை, அம்பாறை, யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, கிளிநொச்சி புத்தளம், பொலனறுவை, அனுராதப்புரம் மற்றும் குருநாகல் ஆகிய மாவட்ட செயலாளர்களுக்கே இந்த இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.

ஒரே மாவட்டத்தில், நான்கு வருடங்களுக்கு மேல் சேவையாற்றிய மாவட்ட செயலாளர்களுக்கே இந்த இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளதாக உள்விவகார அமைச்சர் ஜோசப் மைக்கல் பெரேரா தெரிவித்துள்ளார்.

நுவரெலிய மாவட்ட செயலாளராக கடமையாற்றிய டீ.பி.ஜி குமாரசிறி அனுராதப்புர மாவட்டத்திற்கு மாற்றப்பட்டுள்ளார்.

மாத்தளை மாவட்ட செயலாளராக செயற்பட்ட ஹெலன் மீகஸ்முல்ல நுவரெலிய மாவட்டத்திற்கு மாற்றப்பட்டுள்ளார்.

அம்பாறை மாவட்ட செயலாளராக கடமையாற்றிய நீல் அல்விஸ் மாத்தளை மாவட்டத்திற்கு மாற்றப்பட்டுள்ளார்.

பதுளை மாவட்ட புதிய செயலாளராக நிமல் அபேசிறி நியமிக்கப்பட்டுள்ளார்.hiru

Share this:

 
Designed By Fazisolutions
Designed By Fazi Solutions &