அல்லாஹ்வின் பேரருளால் சவுதி அரேபிய அல்- ஜுபைல் மாநகரத்தில் சீனா நாட்டைச் சேர்ந்த 500 தொழிளாலர்கள் புனித இஸ்லாமிய மார்கத்தை தமது வாழ்க்கை நெறியாக அன்மையில் ஏற்றுக் கொண்டனர். இவர்கள் இஸ்லாத்தில் இணைந்து கிட்டத்தட்ட 3 வாரங்கள் ஆகின்றன.
இவர்கள் மன்னர் அப்துல்லாஹ்வின் இருதிக் கிரியைகள் சாதாரனமாக நடந்தமையினால் அதனால் கவரப்பட்டு இஸ்லாத்திற்குல் நுழைந்தாக சமூக வலைத்தளங்களிலும், இணைய செய்திச் சேவைகளிலும் காணக் கூடியதாக உள்ளது.
ஆனாலும் இவர்களின் மனமாற்றத்திற்கும் சவுதி அரேபியாவன் காலம் சென்ற மன்னர் அப்துல்லாஹ் (அல்லாஹ் அவருக்கு அருள் புரிவானாக) அவர்களின் மரணத்திற்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. இது ஜுபைல் மாநாகர தஃவா நிலையத்தில் பணியாற்றும் அஷ்ஷெய்க் யாசிர் பிர்தவ்ஸி அவர்களிடம் உறுதி செய்யப்பட்ட செய்தியாகும்.
எல்லாம் வல்ல அல்லாஹ் சத்தியத்தை சத்தியமாக சொல்லி, அதனை பின்பற்றக் கூடிய மக்களோடு எம்மனைவரையும் ஆக்கி அருள்வானாக!
By AsSheikh Riskhan Mustheen (Salafi) (Madani)