2014ஆம் ஆண்டுக்கான க.பொ.த. சாதாரணதர பரீட்சை இன்று (09) காலை 8.30 மணிக்கு ஆரம்பமாகியது.
நாடுமுழுவதும் 532 பரீட்சை மத்திய நிலையங்களிலும் 33 பிராந்திய நிலையங்களிலும் பரீட்சைகள் நடைபெறுகின்றன.இந்த ஆண்டு 577,220 பேர் பரீட்சையில் தோற்றுகின்றனர்.
பாடசாலை ரீதியாக 370,739 பேரும் தனிப்பட்டரீதியாக 206,481 பேரும் பரீட்சையில் தோற்றவுள்ளமை குறிப்பிடத்தக்கது.