அஷ்ரப் ஏ சமத்
ஜனாதிபதி தேர்தலில் பொதுவேட்பாளர் அறிவிக்கப்பட்டது முதல் முஸ்லிம்களுக்கு எதிராக சண்டித்தனம் காட்டிவந்த பொதுபல சேனாவின் பொது செயலாளரான ஞான சார தேரரை காணவில்லை தேடிக்கொடுபப்வர்களுக்கு சன்மானம் வழங்கப்படும் என போலீசார் அறிவித்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என ஐக்கிய தேசிய கட்சி மேல் மாகாண சபை உறுப்பினரும் மத்திய கொழும்பு அமைப்பாளருமான பைருஸ் ஹாஜியார் குறிப்பிட்டார்.
நேற்று மாலை கொழும்பு புதுக்கடை பிரதேசத்தில் நடந்த மக்கள் சந்திப்பில் கருத்து வெளியிட்ட அவர் முஸ்லிம்களுக்கு எதிராக நாளுக்கு ஒரு பிரச்சினையை தூக்கிக்கொண்டு ஊடக மாநாடு நடத்திய ஞான சார தேரர் மைத்ரியின் வருகையால் இன்று ஓடி ஒளிந்துவிட்டார்.இரண்டு வாரங்களுக்கு மேலாக ஊடகஅவர் ஊடக மாநாடு இல்லை இது தான் எமது நாட்டு முஸ்லிம்களுக்கு கிடைத்த முதல் வெற்றி வரும் ஒன்பதாம் திகதி மைத்திரிபால சிறிசேனவிற்கு முஸ்லிம்கள் போடும் வாக்குகள் ஞான சாரா தேரரையும் அவரது முதலளிமார்களுக்கும் நல்லதொரு பாடத்தை புகட்டும் என அவர் குறிப்பிட்டார்.
காடையர்களுக்கு காவி அணிவித்து குரானையும் ஹதீஸையும் கொச்சப்படுத்தியவர்களை எல்லாம் அறிந்த அல்லாஹ் இருக்கபிடிக்க ஆரம்பித்துவிட்டான் அவனுடைய பிடியில் இருந்து சூழ்ச்சிக்காரர்கள் எவரும் தப்பமுடியாது என குறிப்பிட்ட அவர்.
சூழ்சிக்காரர்களுக்கெல்லாம் சூழ்சிக்காரன் அல்லாஹ் என்பதை இவ்விடத்தில் தான் ஞாபகமூட்டுவதாக ஐக்கிய தேசிய கட்சி மேல் மாகாண சபை உறுப்பினரும் மத்திய கொழும்பு அமைப்பாளருமான பைருஸ் ஹாஜியார் குறிப்பிட்டார்.
