
பொது பல சேனா எனும் பேரினவாதப் பேயையும் ஞானசார எனும் பயங்கரவாதியையும் வளர்த்தெடுத்ததில் எந்தவொரு பிரயோசனமும் அற்றுப் போயுள்ள நிலையில் தம்மால் எதுவும் செய்ய முடியாது வாய் மூடியிருப்பதைத் தவிர வேறு தெரிவில்லாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது பொது பல சேனா.
ஊடகங்களின் தொலைபேசித் தொடர்புகளையும் தவிர்த்து வரும் ஞானசார தமது அமைப்பு இப்போது சமய விவகாரங்களில் மாத்திரமே கவனம் செலுத்தி வருவதாகவும் அரசியல் தொடர்பாக பேச விரும்பவில்லையெனவும் ஆங்கில ஊடகமொன்றுக்கு கருத்து வெளியிட்டுள்ளார்.
பொது பல சேனா அமைப்பினால் கலவரம் உருவாக்கப்படும் எனும் பயம் தமக்கிருப்பதாக ஏற்கனவே தமது முடிவு தொடர்பான கால அவகாசத்தை நீடிக்கும் பொருட்டு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தெரிவித்துள்ள நிலையில் பொது பல சேனா அமைப்பு அரசின் கூட்டணியில் இருக்குமானால் தான் வெளியேறி விடுவேன் என பிரதியமைச்சர் பைசர் முஸ்தபாவும் தெரிவித்திருக்கும் நிலையில் ஆரம்பத்தில் அமைச்சர் ரிசாத் பதியுதீனின் கட்சி ஒரு கறிவேப்பிலையென தெரிவித்த போதும் மேற்கொண்டு தற்போதைய அரசியல் சூழ்நிலையில் வாய் திறக்க முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறது பொது பல சேனா.
எனினும் இவ்வமைப்பைக் கட்டுப்படுத்துவது தொடர்பில் அரசாங்கம் எதையும் சொல்லவோ அல்லது அது தொடர்பான நேரடி பேச்சுவார்த்தையில் ஈடுபட அரசின் முஸ்லிம் பங்காளிக் கட்சிகளோ, உறுப்பினர்களோ இதுவரை எதுவித முன்னெடுப்பும் செய்யாத நிலையில் எதிர்க்கட்சி பலவீனமாகுமானால் மீண்டும் இனவாதம் பேசுவதற்கு பொது பல சேனாவின் அரசுக்கு உருவாகும் என அவதானிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இதேவேளை, குறித்த அமைப்பானது உண்மையிலேயே பௌத்தவாதம், பௌத்த வாழ்க்கை முறை மற்றும் புரட்சியென பேசியவை எல்லாம் அர்த்தமுள்ளவையாக இருந்தால் அரசாங்கத்தின் நெருக்கடி கருதி வாய் மூடி இருக்கும் தேவையோ அல்லது ஞானசார பேசி வந்த வீரத்தின் அளவுக்கு இவ்வாறு வாய்மூடி இருக்க வேண்டிய தேவையோ இருக்கப்போவதில்லையெனவும் இப்போது இவர்கள் வாய்மூடி இருப்பதிலிருந்து தமது பொருளாதார மற்றும் தனிப்பட்ட வாழ்க்கை நலனுக்காகவே பௌத்த பேரினவாதத்தை அவர்கள் தூக்கிப் பிடித்திருந்ததாகவும் இனவாத பிரச்சினையை நன்கு அவதானித்து வரும் ஊடகவியலாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
எனவே, இந்த போலி மாயை உடைத்தெறியும் வகையில் மைத்ரிபால சிறிசேன ஆட்சி அமைய வேண்டியதன் அவசியம் மேலும் வலியுறுத்தப்படுவதாகவும் இவ்வமைப்பு தொடர்பாக ஜனாதிபதியை நடவடிக்கை எடுக்கத் தூண்டும் கடமையும் வாய்ப்பும் தற்போது அரசில் அங்கம் வகிக்கும் அனைத்து முஸ்லிம் மற்றும் சமாதானத்தை விரும்பும் மக்கள் பிரதிநிதிகளுக்கும் அமைந்துள்ளதாகவும் இது குறித்து எம்மோடு கலந்துரையாடிய பல தரப்பினர் கருத்து வெளியிட்டுள்ளமையும் ஜனாதிபதி தேர்தலை வெற்றியாளரை தீர்மானிக்கும் அளவு வாக்கு வங்கி தம்மிடம் இருப்பதாக முன்னர் ஞானசார தெரிவித்து வந்தமையும் குறிப்பிடத்தக்கது.