பொது வேட்பாளர் மைத்ரீபால சிறிசேனவின் பிரச்சாரக் கூட்டம் எதிர்வரும் 19ஆம் திகதி வெள்ளிக்கிழமை பிற்பகல் 3 மணிக்கு பரகஹதெனிய சந்தியில் இடம்பெறவுள்ளது.
இக்கூட்டத்தில் பொது வேட்பாளர் மைத்ரீபால சிறிசேன, ஐக்கிய தேசியக் கட்சியின் தேசிய தலைவர் ரணில் விக்ரமசிங்ஹ, சஜித் பிரேமதாச, சரத் பொன்சேகா, ரத்தன தேரர் உட்பட பல அரசியல் பிரமுகர்கள் பங்கேற்க உள்ளமை குறிப்பிடத்தக்கது.

