(Azeem )
பொதுபல சேனா அமைப்பினரின் கூட்டம் ஒன்று இன்று காலை 10 மணியளவில் மாவனல்லை நகரில் நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டு அங்குள்ள சிங்கள இன மக்களின் கடைகளில் துண்டுப்பிரசுரமும் வழங்கப்பட்டதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்தார்.
அவர்கள் காலை வரவில்லை எனவும் சற்றுமுன் (2 மணி) எம்மை தொடர்புகொண்ட எமது நிருபர், பொதுபல சேனா அமைப்பின தற்போது மவனல்லையை வந்தடைந்து கூட்டத்தை ஆரம்பித்து உள்ளதாகவும் தெரிவித்தார்.
அதேவேளை மாவனல்லை நகரம் எங்கும் பொலிஸ் பாதுகாப்பு பலப்படுதப்ப்துள்ளதை காணக்கூடியதாக உள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
மாவனல்லை நகர மத்தியில் ஒரு கூட்டமொன்றை இன்று (10) நடத்தி விட்டு, ஞாயிற்றுகிழமை(12) மாவனல்லை நகரில் இருந்து தெவனகல பகுதிக்கு பேரணியாக செல்ல திட்டமிட்டு இருப்பதாகவும் தகவல் கிடைத்துள்ளது.
பொதுபல சேனா அமைப்பினர் மாவனல்லையில்
பொதுபல சேனா அமைப்பினர் இன்று மாவனல்லையில் (2014.01.10) வெள்ளி மாவனல்லை தெவனகல குன்று சம்பந்தமாக மாவனல்லை நகர மத்தியில் மணிக்கூட்டுக்கோபுரத்திற்கு அருகிலே சுமார் 16 பிக்கு மார்களுடன் சில வாகனங்களுடனும் இன்று பி.ப 2.00 மணியளவில் வந்து கூடினர்.
அவர்களுடன் இப்பிரதேசத்திலுல்ல சில சிங்கள மக்களும் சேர்ந்து கொண்டனர். ஏற்கனவே சில தினங்களுக்கு முன்பு தெவனகல குன்று சம்தமாக பேச காலை 11 மணிக்கு மாவனல்லை நகர மத்தியில் மணிக்கூட்டுக்கோபுரத்திற்கு அருகிலே வருவதாகவும் அதற்கு அனைத்து சிங்கள சஹோதரர்களும் வெள்ளை உடை அணிந்து வரும்படியும் சுவரொட்டிகளும் துண்டுப்பிரசுரங்களும் வெளியிடப்பட்டிருந்தன.
எனினும் இவர்கள் பி;.ப. 2 மணியளவிலேயே குறிப்பிட்ட இடத்திற்கு வந்தனர்.காலை முதலே பொலிஸ் படையினர் விசேட அதிரடிப் படையினர் குவிக்கப்பட்டிருந்தனர்.
இவர்களுடன் விஷேட பொலிஸாரும் கடமையில் ஈடுபட்டதைக் கானக்கூடியதாக இருந்தது என அங்கிருந்தவர்கள் கூறினர்.
இவ்வேளையிலே பொதுபல சேனா அமைப்பினர் அங்கு கூடியிருந்த சிங்கள மக்களுடன் சிறிது நேரம் உரையாற்றினர்கள்.
அவ்விடத்திற்கு பிரமதத்வர்கள் வரவேன்டாம் எனவும் வீடியோக்கள் எடுக்கவேன்டாம் எனவும் கூறப்பட்டதகவும் தெரிய வந்துள்ளது.
நூற்றுக்கனக்கான பட்டாசுகள் கொளுத்தப்பட்டன.
தொடர்ந்து அவர்கள் ஒன்றாக கூடி தெவனகலை வேண்டும், தெவனகலை வேண்டும் தெவனகலை வேண்டும்என கோசமிட்டவாரு நாங்கள் மீண்டும் தெவனகலையை மீற்க வருமோம் எனவும் கூறி அவர்கன் வந்த சொகுசு வாகனங்களிலே ஏறி சுமார் 2.30 மணியளவில் கண்டி திசையை நோக்கிச்சென்றனர்.
ஏராலமான முஸ்லிம் சகோதரர்கள் எதிரே கூடியிருந்ததால் கலைந்து செல்லுமாரு பொலிஸார் வேண்டுகோள் விடுத்தனர்.
அனைவரும் அமைதியாக கலைந்து சென்றனர்.






