யுத்த மோதல்கள் இடம் பெறும் யேமனில் சிக்கியுள்ள 59 இலங்கையர்கள் நாளை தினம் நாட்டுக்கு அழைத்து வரப்படவுள்ளனர்.
வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியக தலைவர் நந்தபால விக்ரமசூரிய இதனைத் தெரிவித்துள்ளார்.
சீனா வானுர்தி மூலம் பஹரேன் வரை அழைத்து செல்லப்படவுள்ள அவர்கள், நாளை இரவு இலங்கையை வந்தடைவர் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
சீனாவுக்கு மேலதிகமாக இந்தியா மற்றும் இந்தோனேசியாவின் உதவியும் இதற்காக பெறப்பட்டுள்ளதாக, வெளிவிவகார அமைச்சு ஏற்கனவே தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.