BREAKING NEWS

Dec 3, 2013

விபத்தில் பலியான பிரபல ஹாலிவுட் நடிகர் PAUL WALKER


நேற்று நடந்த கார் விபத்தில் சிக்கி ஹாலிவுட் நடிகரான பால்வாக்கர் மரணமடைந்தார்.

ஹாலிவுட் நடிகரான 40 வயது பால்வாக்கர், நேற்று மதியம் அறக்கட்டளை நிகழ்ச்சி ஒன்றில் கடந்து கொண்டு தன் நண்பர்களுடன் காரில் திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது, எதிர்பாராத விதமாக அவரது கார், லாஸ் ஏஞ்சல்ஸ் சாண்டா கிளாரிட சிக்னல் அருகே ஒரு மரத்தின் மீது அந்த (porche )கார் மோதியது.

மோதிய வேகத்தில் கார் தீப்பிடித்தது. இதனால் அவர்கள் வந்த கார் தீப்பிடித்து எரிந்தது. இந்த விபத்தில் பால்வாக்கரும், அவருடன் காரில் பயணம் செய்த நண்பரும் பரிதாபமாகப் பலியானார்கள்.

பால்வாக்கர் தற்போது ‘ ஃபாஸ்ட் அண்ட் ஃப்யூரியஸ்' என்ற திரைப்படத்தில் நடிந்துக்கொண்டிருந்தார். இது இவரது ஏழாவது படம் என்பது குறிப்பிடத்தக்கது.

பால்வாக்கரின் மரணச் செய்தி அறிந்த அவரது நண்பர்களும், ரசிகர்களும் சோகத்தில் மூழ்கியுள்ளனர்.




Share this:

 
Designed By Fazisolutions
Designed By Fazi Solutions &