10.12.1434
16.10.2013
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா விடுக்கும் பெருநாள் வாழ்த்து
அல்லாஹு அக்பர் அல்லாஹு அக்பர் அல்லாஹு அக்பர்
தியாகத்திருநாள் ஈதுல் அழ்ஹாவை கொண்டாடிக் கொண்டிருக்கும் முஸ்லிம் சகோதர, சகோதரிகள் அனைவருக்கும் ஈதுல் அழ்ஹா வாழ்த்துக்களை அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா தெரிவித்துக் கொள்கிறது.
தியாகச் செம்மல் நபி இப்றாஹிம் (அலை) அவர்களது முழுவாழ்வுமே தியாகத்தோடு நிறைந்ததாகும். அத்தகையதொரு நபியை நினைவுகூரும் நாமும் அத்தியாக உணர்வை வளர்த்துக்கொள்ள கடமைப்பட்டுள்ளோம். நபி இப்றாஹிம் (அலை) அவர்களது புதல்வர் இஸ்மாயில் (அலை) அவர்களது வரலாற்றிலிருந்தும் மற்றும் மனைவி ஹாஜர் (அலை) அவர்களது வரலாற்றிலிருந்தும் நாம் படிப்பினை பெறவேண்டும்.
உங்களில் எவர் அல்லாஹ்வையும் இறுதி நாளையும் நம்புகிறார்களோ அவர்களுக்கு திடமாக இவர்களில் (இப்றாஹீம் (அலை) அவர்களிடமும் அவரோடு இருந்தவர்களிடமும்) அழகிய முன்மாதிரியிருக்கிறது. (60:06) என்ற அல் குர்ஆன் வசனத்தை நினைவில் நிறுத்தி தியாக சிந்தையோடு வாழ எல்லாம் வல்ல அல்லாஹ் துணை புரிவானாக! எம் எல்லோரினதும் நற்கிரியைகளையும் அங்கீகருத்தருள்வானாக!
தகப்பலல்லாஹு மின்னா வமின்கும்!
ஈத் முபாரக்!
அஷ்-ஷைக் எம்.எம்.ஏ முபாறக்
பொதுச் செயலாளர்
அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா
