BREAKING NEWS

Oct 17, 2013

12 வயது சிறுவன் தூக்கிட்டு தற்கொலை

அக்கரைப்பற்று அட்டாளைச்சேனை பகுதியில் 12 வயது சிறுவன் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் தொடர்பில் விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

தமது தாயுடன் ஏற்பட்ட தகராறு காரணமாக குறித்த சிறுவன் தூக்கிட்டு தற்கொலை செய்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

சடலம் அக்கரைப்பற்று வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில் நீதவான் விசாரணைகளை மேற்கொண்ட  அக்கரைப்பற்று நீதவான், பிரேத பரிசோதனைகளை மேற்கொள்ளுமாறு உத்தரவிட்டுள்ளார்.

Share this:

 
Designed By Fazisolutions
Designed By Fazi Solutions &