BREAKING NEWS

Sep 18, 2013

கட்டார் பனாரில் இஸ்லாமிய மாநாடு (20/09/2013 வெள்ளி மாலை)

“இப்ராஹீம் நபியின் வரலாறு இன்றைய உலகுக்குச் சொல்லும் செய்தி”

கடுமையாகச் சோதிக்கப்பட்ட, அனைத்துத் சோதனைகளையும் அசையாது நின்று தாங்கிய, உலகம் அழியும் வரைத் தோன்றும் அனைவரும் படித்துப் படிப்பினை பெருமளவு பெரும் வரலாறாக மாறிய ஒரு நபிதான் இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள்.

இலங்கை தொடக்கம் உலக உருண்டையில் நவீன நம்ரூதுகளால் சிதைக்கப்படும் முஸ்லிம் சமூகத்துக்கு இந்தஇப்ராஹீம் நபியின் வரலாற்றில் நிறையப் படிப்பினைகள் உண்டு எனக் குர்ஆன் கூறுகின்றது. அவை என்ன என்று தெரிந்துகொள்ள வேண்டாமா ?

ஹஜ்ஜின் அவசியமும் படிப்பினைகளும்

ஹஜ், இஸ்லாத்தின் ஐந்து அடிப்படைக் கடமைகளில் ஒன்று. வசதி வந்தவர்கள் உடன் செய்யவேண்டிய கடமை. ஆனால் இன்று உலகில் மிகவும் உதாசீனப் படுத்தப்படும் கடமைகளில் ஒன்று இது. பொடுபோக்காய் மிகவும் காலம் கடத்திச் செய்யப்படும் கடமையும் இதுதான். ஹஜ்ஜின் சிறப்பு, அதன் அவசியம், விடுவதின் பாவம், வசதி என்றால் என்ன என்பன பற்றித் தெரிந்துகொள்ள வேண்டாமா ?

இவைகளைத் தெளிவுபடுத்துவதே இம்மாநாட்டின் நோக்கம். கட்டரில் உள்ளவர்கள் இன்ஷாஅல்லாஹ் தவறாது கலந்து கொள்ளுங்கள், மற்றவர்களையும் கலந்துகொள்ளத் தூண்டுங்கள். மேலதிக விபரத்துக்கு இணைப்பைப் பாருங்கள்.

ஏற்பாடு: SRI LANKA DA’WA CENTER –(SLDC) – QATAR

SEPTEMBER 20, 2013
AFTER MAGHRIB PRAYERS
FANAAR CONFERENCE HALL

(Arshad Razick)

Share this:

 
Designed By Fazisolutions
Designed By Fazi Solutions &