மாகாண சபைத் தேர்தலுக்கான வாக்களிப்பு இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது.
வாக்கெடுப்பு நிறைவுபெற்ற பின்னர் வாக்குப் பெட்டிகளை வாக்குச் சாவடிகளில் இருந்து கொண்டுசெல்வதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக எமது செய்தியாளர்கள் குறிப்பிடுகின்றனர்.
அத்துடன் இந்த நடவடிக்கைகளின் போது போதிய பாதுகாப்பு ஏற்பாடுகளும் வழங்கப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இதேவேளை, தேர்தல் நடைபெற்ற அநேகமான மாவட்டங்களில் 50 வீதத்திற்கும் அதிகமான வாக்களிப்பு பதிவாகியுள்ளதாக மாவட்ட தெரிவத்தாட்சி அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இதேவேளை, வடக்கு, மத்திய மற்றும் வடமேல் மாகாண சபைகளுக்கான தேர்தல் வாக்களிப்பு மிகவும் அமைதியான முறையில் இடம்பெற்றதாக எமது பிராந்திய செய்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இன்று காலை 7 மணிக்கு ஆரம்பமான வாக்களிப்பு, மாலை 4 மணியுடன் நிறைவடைந்தது.
