மாகாண சபைத் தேர்தல் பிரச்சாரங்கள் சூடு பிடித்திருக்கும் தருவாயில் ஒவ்வொரு கட்சியும் ஒவ்வொரு வேட்பாளரும் தமக்கான விருப்பு வேட்டையில் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.
அந்தவகையில் நேற்று 15-09-2013 ஞாயிற்றுக் கிழமை பிற்பகல் 4.00 மணிக்கு பரகஹதெனிய முச்சந்தியில் ஐக்கிய தேசியக் கட்சியின் பிரச்சாரக் கூட்டம் இடம்பெற்றது.
ஐக்கிய தேசியக் கட்சி சார்பாக இம்முறை மாகாண சபைத் தேர்தலுக்கு களத்தில் குதித்திருக்கும் பரகஹதெனியவைச் சேர்ந்த ரிபாளின் வெற்றியை உறுதிப்படுத்தும் கூட்டமாக இது அமைந்திருந்தது எனில் திருத்தமானதாகும்.
அதிகளவிலான மக்கள் கலந்துகொண்ட இக்கூட்டத்தில் ஜே சி அளவதுவள உட்பட வேட்பாளர்கள் சிலரும் மங்கள சமரவீர, உதார பல்லியகுருகே, உட்பட பல ஐக்கிய தேசியக் கட்சிப் பிரமுகர்களும் கலந்துகொண்டு உரை நிகழ்த்தியமை குறிப்பிடத்தக்கது








